..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

தடுப்பூசி போட்ட குழந்தை சாவு - நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சண்முகத்தாய். இவர் ஊனமுற்றவர்.

தற்போதுதான் தலைபிரவசமாகி 45 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக அருகில் உள்ள வன்னிகோனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையின் 2 தொடைகளிலும் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் தடுப்பூசி போட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் நின்று விடும் என்று அழுத்தி பிடித்து வைத்திருந்தனர்.

ஆனால் ரத்தம் நிற்கவில்லை. இதை தொடர்ந்து அந்த குழந்தையை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்தும் சரியாகவில்லை. இதனால் கைக்குழந்தையை தூக்கி கொண்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று குழந்தை இறந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கலெக்டர் மற்றும் பணவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு [^] பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Posted on 20 Jun 2009 by Admin